ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரமாரி வெட்டிக்கொலை
தஞ்சையில், ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கூடலூர் பெரிய தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 64). இவர் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2001-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று விட்டார். இதன் பின்னர் 2001 முதல் 2006 வரை கூடலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.கோவிந்தராஜனுக்கு வாசுகி என்ற மனைவியும், ரவிநாத்(45), கோபிநாத்(31), விஸ்வநாத்(27) என்ற 3 மகன்களும், ஈஸ்வரி(35), ராஜேஸ்வரி(33), மகேஸ்வரி(26) என்ற 3 மகள்களும் உள்ளனர். இதில் விஸ்வநாத், மகேஸ்வரி ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை கிழக்குப்போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோபிநாத்தை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக கோவிந்தராஜனும், அவருடைய அண்ணன் மகன் கேசவனும் நேற்று தஞ்சைக்கு வந்தனர்.
பின்னர் இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். கோவிந்தராஜன் முன்னே செல்ல, அவருக்கு சற்று தொலைவில் பின்னால் கேசவன் சென்றார். தஞ்சை பள்ளியக்கிரஹாரம் புறவழிச்சாலையில் இருந்து கூடலூருக்கு பிரியும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் கோவிந்தராஜன் சென்றபோது அந்த பகுதியில் மறைந்து இருந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டிற்கு ஓடி வந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
திடீரென்று 4 பேர் கொண்ட கும்பல் ஓடி வந்து தன்னை வழிமறித்ததால் திடுக்கிட்ட கோவிந்தராஜன், பின்னர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதைப்பார்த்து பின்னால் வந்த கேசவன் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. மர்ம நபர்கள் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கோவிந்தராஜனின் அண்ணன் மகன் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை நகர கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவிந்தராஜன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கூடலூர் பகுதியை சேர்ந்த மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை, போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story