எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மேலும் அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம்போல் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 145 விசைப்படகுகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்களில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் மதன்(வயது 23), ஆனந்தன்(45), ராஜ்கண்ணன்(50), சதீஷ்(20) ஆகிய 4 மீனவர்களும், மற்றொரு படகில் செல்வமணி(45), அவரது மகன் சந்தோஷ்(25), சதீஷ்(21), பொன்னுக்குட்டி(55) ஆகிய 4 மீனவர்களும் என மொத்தம் 8 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகள், படகில் பிடித்து வைத்திருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் டீசல், மீன்பிடி வலைகள், உபகரணங்கள், செல்போன்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 8 மீனவர்களும் மேல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மீனவ சங்க தலைவர் ராமதேவன் கூறியதாவது:- தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மீனவர்கள் மூலம் நாட்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மீனவர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் அரசாங்கம் பெற்றுக்கொண்டு மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. இதேநிலை தொடர்ந்து நீடிக்குமானால் ஒட்டுமொத்த மீனவர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் படும்.
மத்திய, மாநில அரசுகள் இனியாவது மீனவர்கள் விஷயத்தில் அக்கறை கொண்டு இனியும் இதேபோல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும், ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story