ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய 460 காளைகள் முட்டித்தள்ளியதில் 25 பேர் காயம்
மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டில் 460 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. காளைகள் முட்டித்தள்ளியதில் 25 பேர் காயமடைந்தனர்.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள புறத்தாக்குடியில் புனித வனத்து அந்தோணியார் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் அனைத்தையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர், தகுதியுள்ள காளைகள் மட்டும் களம் இறங்க அனுமதிக்கப்பட்டன. இதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, தகுதியுள்ள மாடுபிடி வீரர்களை மட்டுமே போட்டிக்கு அனுமதித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் தொடங்கி வைத்தார். முதலில் அந்தோணியார் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. கோவில் காளை என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சில உள்ளூர் காளைகளும், அதன்பின்னர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளம் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்று விட்டன. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், தென்னங்கன்று உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 463 காளைகள் வந்திருந்ததில், 3 காளைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், 460 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதேபோல் 261 மாடுபிடி வீரர்களில் 19 பேர் உடல் தகுதியில்லாத காரணத்தால் 242 வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டனர்.
காளைகள் முட்டித் தள்ளியதில் 14 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 9 பேர், பார்வையாளர்கள் 2 பேர் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கருங்குளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சேசுராஜ் (வயது 23) என்ற மாடுபிடி வீரருக்கு வயிற்றில் காளை உதைத்து வீங்கி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூரில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள 18 ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகள் நேற்று காலை புறத்தாக்குடியில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். அப்போது அவர்கள் தங்களின் செல்போன்களில் ஜல்லிக்கட்டு போட்டியை படம் பிடித்ததுடன் ‘செல்பி’யும் எடுத்துக்கொண்டனர். வந்திருந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாஸ் கல்யாண் தலைமையில் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடைபெறுகின்றதா என்பதை தொடர்ந்து கண்காணித்தனர்.

Related Tags :
Next Story