வரவேற்பு பதாகைகள் அகற்றியதை கண்டித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்
தஞ்சையில், டி.டி.வி. தினகரனை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பதாகைகள் அகற்றப்பட்டதை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் வந்த லாரியையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் அடுத்த மாதம்(பிப்ரவரி) சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். இதையடுத்து அவரை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைத்துள்ளனர்.
தஞ்சை ரெயில் நிலையம் அருகேயும் இந்த பதாகைகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் அங்கு வந்தனர். அவர்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த பதாகைகளை அகற்றினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், பகுதி செயலாளர்கள் விருத்தாசலம், மகேந்திரன், சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் அய்யாவு, ராஜா மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அவர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம், ஏன் வரவேற்பு பதாகைகளை அகற்றுகிறீர்கள் என கேட்டனர். இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் ஆதரவாளர்கள் மாநகராட்சி லாரியின் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு லாரியை சிறை பிடித்தனர். மேலும் லாரியின் முன்பு அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள், தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்னாள் கவுன்சிலர் அருளழகன், மாநகராட்சி லாரியின் காற்றை பிடுங்கினார். இதனைப்பார்த்த கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று விட்டனர்.
அதன் பின்னர் கழற்றப்பட்ட பதாகைகளை அங்கேயே போட்டு விட்டு மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர். இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் தஞ்சையில் நேற்று மாலை சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story