பள்ளத்தில் அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து 9 பேர் படுகாயம்
கந்தர்வகோட்டை அருகே நடந்த விபத்தில் பள்ளத்தில் அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கந்தர்வகோட்டை,
மதுரையில் இருந்து நேற்று அதிகாலை தஞ்சாவூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கருணாகரன் (வயது 43) ஓட்டினார். கண்டக்டராக பாலசுப்பிரமணியன் பணியாற்றினார். பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் தஞ்சாவூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
9 பேர் படுகாயம்
அப்போது தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் படுகாயமடைந் தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்... என அபய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 9 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தனியார் பஸ்சில் வந்த யாருக்கும் காயம் ஏதுவும் ஏற்பட்டவில்லை.
கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று அதிகாலை தஞ்சாவூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story