வாலாஜா அருகே மணல் கடத்திய 7 பேர் கைது

வாலாஜா அருகே மணல் கடத்திய 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2018 3:45 AM IST (Updated: 29 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம், திருமலைச்சேரி கிராம சாலைகள் சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாலாஜா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 7 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா,

அதேபோல் குடிமல்லூர் கிராம பாலாற்றங்கரை பகுதியில் 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜா போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டி ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story