இந்திய எல்லை பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது மத்திய உள்துறை இணை மந்திரி பேட்டி
இந்திய எல்லை பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது என்று அரக்கோணத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியை நிறைவு செய்யும் இவர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நேற்று இந்த மையத்தில் 40-வது பிரிவில் 789 பெண் காவலர்களின் பயிற்சி முடிந்ததை தொடர்ந்து நிறைவு விழா நடந்தது. விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை கூடுதல் இயக்குனர் அலோக்குமார் பாடரியா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை இணை மந்திரி கிரண்ரிஜிஜூ கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் சென்று வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பயிற்சியில் அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கிய பாந்தனாகுமாரி, உள்பிரிவில் சிறந்த வீராங்கனை சாஜ்னி, துப்பாக்கி சுடுதல் பிரிவில் சிறந்து விளங்கிய லக்கிஷா உள்ளிட்டவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை அவர் வழங்கி பேசினார்.
பின்னர் மத்திய உள்துறை இணை மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதால் பயிற்சியில் நல்ல திறனாளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மேற்கு எல்லை பகுதியில் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊடுருவல் தடுக்கப்பட்டு வருகிறது. சீனா, மியான்மர் எல்லை பகுதிகளிலும் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் வங்காளதேச பகுதிகளில் இருந்து அகதிகளாக அதிகமானவர்கள் இந்தியாவில் குடிபெயர்ந்து வந்தனர். தற்போது எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து உள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்கள் அதிகளவில் பதிவாகி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு தனிப்பிரிவு உருவாக்கி அதன்மூலம் சைபர் குற்றங்களை கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு பணியில் எதிரிகளின் வியூகத்தை மிஞ்சும் வகையில் இந்திய பாதுகாப்பு படையின் வியூகம் தற்போதைய ‘டெக்னாலஜி’ மூலம் வளர்ந்து காணப்படுகிறது. இதன் மூலம் இந்திய எல்லை பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story