அரசலூரில் ஜல்லிக்கட்டு; 20 வீரர்கள் காயம்
அரசலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வேப்பந்தட்டை அருகே உள்ள அரசலூரில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரசலூரில் வயல் வெளிப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையில் 18 மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் அன்னமங்கலத்தை சேர்ந்த சபரியார் (வயது 35), அரசலூரை சேர்ந்த சின்னப்பன் (20), பெரம்பலூரை சேர்ந்த சரவணன் (37), திருச்சி மாவட்டம் மருதூரை சேர்ந்த மணிகண்டன் (21) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சபரியாரை மட்டும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி அரைஞாண் கொடி, வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரும்பாவூர், வேப்பந்தட்டை, அன்னமங்கலம், அரியலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அரசலூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story