சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ரெயில் மறியல்
சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க கோரி திருச்சியில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்தபோது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் ஜி. ராமகிருஷ்ணன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து உடனடியாக குறைந்த பட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஜனவரி 28-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயிலை மறிப்பதற்காக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று காலை வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் திரண்டனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர்கள் இந்திரஜித், அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்), விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்), ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, சேரன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜெகதீஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள் உள்பட ஏராளமானவர்கள் ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.
அவர்களை ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் ‘பேரிகாட்’ அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ரெயில் நிலையம் வரை செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேரிகாட்களை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் பிடித்து தள்ளினார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடக அரசே தண்ணீர் திறந்து விடு, தண்ணீருக்காக போராடும் விவசாயிகளை காவல் துறையே தடுக்காதே என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் இங்கேயே தரையில் அமர்ந்து போராடுவோம் என்றார்கள். அப்போது அய்யாக்கண்ணு உள்பட சில விவசாயிகள் தரையில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அவர்களை எழுப்ப வந்த போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திகணேசன், மயில்வாகனன், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனி விஜயா ஆகியோருடன் ஜி. ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராமகிருஷ்ணன் ‘நாங்கள் நடத்துவது ரெயில் மறியல் போராட்டம். சாலை மறியல் அல்ல. இந்த போராட்டம் பற்றி ஏற்கனவே முறைப்படி அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். எனவே ரெயில் வரை செல்ல அனுமதிக்க வேண்டும். எங்கள் போராட்டம் அறவழியில் தான் நடைபெறும்’ என்றார். இதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் ரெயில் நிலையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இதன் அடிப்படையில் ஜி. ராமகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள் மட்டும் ரெயில் நிலையத்திற்குள் சென்று முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது ராமகிருஷ்ணன் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் வெற்றி செல்வன் தலைமையில் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து ரெயிலை மறிக்க சென்ற 25 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்தினால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பர பரப்புடன் காணப்பட்டது.

Related Tags :
Next Story