நாக்பூரில் ரூ. 750 கோடியில் சட்டக்கல்லூரி பட்னாவிஸ் அறிவிப்பு
நாக்பூரில் புதிதாக சட்டக்கல்லூரி கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டம் அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
நாக்பூர்,
நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்–மந்திரி தேவேந்தர பட்னாவிஸ் கூறியதாவது:–
ரூ. 750 கோடி செலவில் கட்டப்பட உள்ள நாக்பூர் சட்டக்கல்லூரி திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் ரூ. 200 கோடி செலவில் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் பேரி ஊரக குடிநீர் வினியோக திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 10 கிராமங்களை சேர்ந்த 3.5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
அதுமட்டும் அல்லாமல் மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் இணைந்து, உஜ்வால் நகரில் இருந்து மனிஷ் நகர் வரையிலான மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story