பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்து மனு அளித்த விவசாயிகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் சைக்கிளில் வந்து மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, துணை தலைவர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க கோரி சைக்கிளில் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி 9 முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
பொட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை தினந்தோறும் பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதன்காரணமாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76, டீசல் ரூ.67 என விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக டிராக்டர், நெல் அறுவடை செய்யும் எந்திரம் உள்ளிட்டவற்றின் வாடகையும் உயர்கிறது. போக்குவரத்து செலவினங்களும் அதிகரிக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சூலூர் வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவை வாகராயம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று இயங்கி வந்தது. நாங்கள் தொடர்ந்து நடத்திய போராட்டம் காரணமாக இந்த மதுபானக்கடை மூடப்பட்டு விட்டது. ஆனால் தற்போது சிலர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சாவும் விற்கப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
மேலும் பள்ளி அருகில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதால் மாணவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மது குடிப்பவர்கள் இந்த வழியாக வரும் பெண்கள், மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலசங்கத்தினர் அளித்த மனுவில், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே சுற்றுலா வாகன டிரைவர்கள் பணி புரிய வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். குற்றசெயல்களில் ஈடுபடாத வாகன டிரைவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசல் ஓட்டுனர் உரிமத்தை திரும்ப வழங்க வேண்டும். டிரைவர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பாப்பநாயக்கன் பாளையம் அருந்ததியர் வீதி, ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில் பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுதர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மத்துவராயபுரம் மக்கள் அளித்த மனுவில், மணல் திருட்டை தடுக்கும் வகையில் நொய்யல் ஆறு கரையோரத்தில் கன ரக வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story