பஸ் கட்டணம்: தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல், 353 பேர் கைது
நெல்லை, பாளையங்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 353 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.
நெல்லை மாநகரில் நேற்று 2 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றன. நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மறியல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் தி.மு.க.வினர் திடீரென்று கையில் கட்சி கொடிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரோட்டில் இருந்து புறப்பட்டு சந்திப்பு நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதேபோல் காங்கிரசார் கொக்கிரகுளத்தில் உள்ள தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சந்திப்பு நோக்கி சென்றனர். இதுதவிர ம.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளும் ஆங்காங்கே இருந்து ஊர்வலமாக வந்து கொக்கிரகுளத்தில் குவிந்தனர்.
இதைக்கண்ட போலீசார் அங்கு விரைந்து வந்து, ஊர்வலமாக சென்ற கட்சியினரை தடுத்து நிறுத்தினர். அவர்களை மேலும் செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து கொக்கிரகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அனைத்து கட்சியினரும் மெயின் ரோட்டில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே நெல்லை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் அவர்களும் கொக்கிரகுளத்துக்கு சென்று மறியலில் கலந்து கொண்டனர்.
இதனால் இருபுறமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைக்கண்ட போலீசார் மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி, அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனைவரையும் ஒரே நேரத்தில் கைது செய்து வேனில் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் சில கட்சி நிர்வாகிகள் தாங்களாகவே மண்டபத்துக்கு கட்சி கொடிகளுடன் சென்று சேர்ந்தனர்.
இதில் தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ., நெசவாளர் அணி பெருமாள், இலக்கிய அணி சஞ்சய்குமார், விவசாய அணி சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வீ.பழனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உஸ்மான்கான், துணை செயலாளர் ஜாபர் மற்றும் 36 பெண்கள் உள்பட மொத்தம் 280 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் 15 பெண்கள் உள்பட மொத்தம் 73 பேரை கைது செய்தனர். அவர்களை முருகன்குறிச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
நெல்லை மாநகரில் 2 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 51 பெண்கள் உள்பட 353 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் நெல்லை மாநகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி வந்த வாகனங்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன. வண்ணார்பேட்டை வழியாக நெல்லை சந்திப்பு நோக்கி வந்த வாகனங்கள் வடக்கு புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதனால் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் முடிந்த பிறகு ½ மணி நேரம் கழித்தே போக்குவரத்து சீரடைந்தது.

Related Tags :
Next Story