கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:00 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தாமரைக்குளம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரியலூரிலும் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து ஜனவரி 24-ந் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மீண்டும் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் அரியலூரின் முக்கிய சாலைகள் வழியாக பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story