பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க., தோழமை கட்சியினர் சாலை மறியல்
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க., தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் எதிரே தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், தமிழக கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 143 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொளக்காநத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 197 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மதியழகன் தலைமையில், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் வல்லபன் முன்னிலையில் பாடாலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 141 பேர் கைது செய்யப்பட்டு அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சியை சேர்ந்த 800 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அனை வரையும் மாலையில் விடுவித்தனர்.

Related Tags :
Next Story