பஸ்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


பஸ்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி தஞ்சை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாநில துணை செயலாளர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முகமதுஅலி, சங்கர், பழனிவேலு, அவைத்தலைவர்கள் சிவனேசன், சாரங்கபாணி, முருகேசன், பொருளாளர்கள் செங்குட்டுவன், சண்முகசுந்தரம், ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பூபேஷ்குமார், சக்திவேலன், பால.கண்ணன், செல்வராசன், வள்ளி, வானதி, தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், அடைக்கலம், அன்பு, நாடிமுத்து மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றிய செயலாளர் ரெங்கராஜ் வரவேற்றார். முடிவில் வல்லம் பேரூர் செயலாளர் மதியழகன் நன்றி கூறினார். 

Next Story