“குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம்”
‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி’ என்பார்கள். முன்பெல்லாம் தன் தந்தையின் பெயரையே தன் குழந்தைக்கு வைத்து மகிழ்ந்தனர்.
இந்த பெயர்களை வைத்தே அவர்களின் முன்னோர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. ஆனால் இன்று பலருக்கு தன் தாத்தாவின் பெயர்கூட தெரியவில்லை. தன் மொழியின் இனிமை வேறு மொழிக்கு கிடையாது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அர்த்தம் உள்ள தமிழ் பெயர்களை வைத்து அதன் பொருளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அதன் மூலம் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க கற்றுக்கொள்வார்கள்.
தமிழுக்கு ஒரு இழுக்கு என்று முகநூலில் வரும்போது அதைக்கண்டு பொங்கி எழுந்து நம்முடைய மன வருத்தத்தை பதிவு செய்கிறோம். அதில் கூட பலர் தமிழ் எழுத்துக்களை தவறாகத்தான் பதிவு செய்கிறார்கள். நாம் புதுமைக்கு மாறுவதாக நினைத்து பழமையை மறந்து, பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்து வருகிறோம். நவீனகால பெயர் சூட்டுகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாயில் நுழையாத பெயரை வைத்து அதையும் சுருக்கி அழைக்கிறோம். அவர்களின் பெயரைக்கூட அழைக்க முடியாமல் பெரியவர்கள் திணறுகிறார்கள் என்பது வேதனையே. ஒருவரின் பெயரில் எத்தனை உயிரோட்டம் உள்ளது என்பதை உணர்ந்தே நம்முன்னோர்கள் நமக்கு பெயர் வைத்துள்ளனர்.
உதாரணமாக கார்மேகம் என்று தன்னுடைய குழந்தையை அழைக்கும் தாய், அந்த வருண பகவானையே இந்த மண்ணிற்கு மழையாக வா என்று அழைப்பது போல் உள்ளது. இந்த பொருள் பொதிந்த தமிழ் மொழியின் உன்னதத்தையும், சிறப்பையும் நம் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்து உரைப்பதுபோல், இனி அனைவரும் தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு பெயர் வைத்து சிறப்பு சேர்ப்போம்.
-உமரியான்

Related Tags :
Next Story