வருகிற 5–ந்தேதி தர்மபுரிக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்


வருகிற 5–ந்தேதி தர்மபுரிக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:00 AM IST (Updated: 1 Feb 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) தர்ம புரிக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதாசிவம், பிரகாஷ் சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட
தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

மு.க.ஸ்டாலின் வருகை

கூட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) தர்மபுரிக்கு வருகை தரும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்துவது, வருகிற மார்ச் மாதம் 1–ந் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது, இந்த விழாவின்போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் மற்றும் தேவையான கல்வி உபகரணங்களை வழங்குவது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் தர்மச்செல்வன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் செல்லதுரை நன்றி கூறினார்.


Next Story