பள்ளி மாணவிகளை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
வேலூர்,
அணைக்கட்டு கருணீஸ் தெருவில் வசிப்பவர் வடிவேலன் (வயது 34). அணைக்கட்டு ஊனைபள்ளத்தூர் ராமர்கோவில் தெருவில் வசிப்பவர் மோகன்ராஜ் (வயது 20). நண்பர்களான இருவரும் சேர்ந்து, 2016-ம் ஆண்டு மே மாதம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்த 2 மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். இரு மாணவிகளை, ஒரு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று மிரட்டி இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வக்கீல் சுந்தரி ஆஜராகி வாதாடினார்.
10 ஆண்டுகள் சிறை
வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், குற்றம் சாட்டப்பட்ட வடிவேலன், மோகன்ராஜ் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்கினார். அதில் பள்ளி மாணவிகள் கடத்தல், மிரட்டல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உள்பட 4 குற்றப் பிரிவுகளின் கீழ் 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி மேற்கண்ட இருவரும் ஏக காலத்தில் தலா 10 ஆண்டுகள் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும், ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து பலத்த காவலுடன் கோர்ட்டில் இருந்து அவர்களை போலீசார் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story