திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபா ராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபா ராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அஸ்திரதேவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அஸ்திரதேவருக்கு தீபாராதனை நடந்தது.
காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மதியம் சுவாமி அலைவாயுகந்த பெரு மான் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலித்து, மீண் டும் கோவிலை சேர்ந்தார்.
சாமி தரிசனம்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தென் மாவட்டங் களில் இருந்து பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஒரு அடி நீளம் முதல் 21 அடி நீளம் வரையிலான அலகு குத்தியும், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த னர். கடற்கரையில் ஆங் காங்கே பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து, முருக பெருமானின் உருவப்படம் மற்றும் சிலையை வைத்து, அவரது திருப்புகழை பாடி வழிபட்டனர். காவடி எடுத்து வந்த பக்தர்களும் ஆடிப்பாடி முருக பெருமானை வழிபட்ட னர். காணும் இடமெல்லாம் முருக பக்தர் களாகவே காட்சி அளித்ததால், திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டது.
போலீஸ் பாதுகாப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, நடை திருக்காப்பிடப் பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் இரவு 9.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் ராக்கால அபிஷேகம், தீபாராதனை, ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு, திருச் செந்தூர் நகரில் ஆங்காங்கே தன்னார்வலர்கள் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணி கண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story