உதவி கலெக்டர் அலுவலகத்தை 2-வது நாளாக தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகை
கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை 2-வது நாளாக தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை பஞ்சப்படியுடன் சேர்த்து உடனடியாக பாக்கி தொகைகளுடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீப்பெட்டி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தலைமை எழுத்தர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
நேற்று காலையில் 2-வது நாளாக தீப்பெட்டி தொழிலாளர்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பரமராஜ், சேதுராமலிங்கம், தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகா குழு உறுப்பினர் கொம்பையா, நகர துணை செயலாளர் முனியசாமி, பூலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
உதவி கலெக்டர் அனிதா அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர். நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) தீப்பெட்டி தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு வழங்க வேண்டும். இல்லையெனில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் தெரிவித்தனர். பின்னர் கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திலும் தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

Related Tags :
Next Story