முதலாம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு
முதலாம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை அமைந்துள்ளது. அதன்படி பி.ஏ.பி. பாசன திட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்கூடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 3-ம் மண்டல பாசனத்துக்கு 3 சுற்றுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. மேலும் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் பெறப்பட்டு வந்தது. இதன் காரணமாக திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதைதொடர்ந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து நேற்று முதல் உரிய இடைவெளிவிட்டு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்றுகாலை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொத்தானை அழுத்தி பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டார். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் தாலுகா, திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம், பல்லடம், திருப்பூர் மற்றும் காங்கேயம் தாலுகா பகுதியில் உள்ள மொத்தம் 94,521 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, சி.மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், ஜெயராமகிருஷ்ணன், கரைப்புதூர் நடராஜ், கனகராஜ், ஆர்.டி.ஓ. அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story