நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து - வைகோ பேட்டி
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று தேனியில் வைகோ கூறினார்.
தேனி,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்தினால் பேராபத்து ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், எதிர்கால சந்ததிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.
இந்த திட்டத்துக்கு 2010-ம் ஆண்டு இடம் தேர்வு செய்யும் போது, பல இடங்களை பார்த்துவிட்டு எதிர்ப்புகள் வந்ததால் அம்பரப்பர் மலையை தேர்வு செய்துள்ளனர். யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது.
உலகில் எங்கும் இல்லாத மிகப்பெரிய ஆய்வுக்கூடம் இது. இங்கு சுரங்க ஆய்வுக் கூடம் அமைக்க பாறைகளை உடைப்பதற்கு ஆயிரம் டன் வெடி மருந்துகள் பயன்படுத்த உள்ளனர். 12 லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்பட உள்ளன. பாறைகளை தகர்க்க ஒரு நாளைக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படும். இதற்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாறை துகள்கள் கொட்டப்பட உள்ளன.
இத்தாலியில், இதுபோல் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. அரசு மீண்டும் அனுமதி கொடுத்து திட்டத்தை செயல்படுத்திய நிலையில், நில அதிர்வு ஏற்பட்டு 300 பேர் பலியானார்கள். 15 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.
அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைப்பது தொடர்பாக முதலில் அணுக்கழிவுகளை கொட்டப்போவதாக அறிவித்தார்கள். எதிர்ப்பு வந்தவுடன், நீதிமன்றத்தில் தவறுதலாக அச்சிட்டு விட்டோம் என்று கூறினார்கள். இங்கே செயற்கையான நியூட்ரான் கதிர்களை ஏவி, அணு ஆயுதங்களை செயல் இழக்கச் செய்யவும், வெடிக்கச் செய்யவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுவதால் பேராபத்து வரும் என்று அச்சப்படுகிறோம். இங்கு ஆய்வுக்கூடம் அமைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. மோடியும் இத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தில், அணு ஆயுதங்களை வெடிக்க வைக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் கூட வடகொரியா போன்ற நாடுகளால் தென்மாவட்டங்களுக்கு தான் பேரழிவு வரும். இந்த ஆய்வுக்கூடம் அமைத்தால் முல்லைப்பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளது.
அதனால் தான் ‘நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கி உள்ளோம். இத்திட்டத்தில் பேராபத்துகள் குறித்து சென்னையில் கருத்தரங்கு நடத்த உள்ளோம். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்து தொலைபேசியில் கூறினேன்.
அவர், முழு குறிப்புகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து நிச்சயம் இந்த திட்டம் குறித்து எதிர்ப்பை கூறுவேன்.
இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பதற்கு தமிழகம் பரிசோதனைக் கூடமா? பிற மாநிலங்களில் இந்த திட்டத்தை அமைத்து இருக்கலாமே? மோடியின் குஜராத் மாநிலத்தில் அமைத்துக் கொள்ளலாமே. அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்தால், பிரதமர் மோடி உள்துறை செயலாளரை அழைத்து இத்திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
நான் தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வருங்கால சந்ததிகளின் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கக்கூடாது.
தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது. ஒட்டுமொத்தமாய் மக்கள் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக தான் பிரசார பயணங்கள் மேற்கொண்டுள்ளோம்.,
இவ்வாறு வைகோ கூறினார்.

Related Tags :
Next Story