வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை
பெங்களூருவில் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 4-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை.
அதனால் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 4-ந் தேதி பெங்களூருவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை. நமது நாட்டின் பிரதமர் பெங்களூருவுக்கு வரும்போது, அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். பிரதமர் வரும் சந்தர்ப்பத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தால் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. பா.ஜனதாவினருக்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி சொந்தக்காரர் அல்ல. இந்த நாட்டுக்கு சொந்தமானவர் தான் பிரதமர்.
பிரதமர் வருகையையொட்டி முழு அடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பா.ஜனதாவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் தங்களது வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. முழு அடைப்புக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரதமர் எத்தனை முறை வேண்டுமானாலும் கர்நாடகத்திற்கு வந்து செல்லட்டும். அதற்கு காங்கிரஸ் ஒருபோதும் தடையாக இருக்காது.
பா.ஜனதாவினரும், ஓவைசியும் உள்ஒப்பந்தம் செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் காங்கிரசிடம் உள்ளது. சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறித்து உரிய விசாரணை நடத்தும்படியும், மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Related Tags :
Next Story