அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் ‘பொதுமக்களின் பங்களிப்பு ஆன்மா போன்றது’


அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் ‘பொதுமக்களின் பங்களிப்பு ஆன்மா போன்றது’
x
தினத்தந்தி 1 Feb 2018 11:23 AM IST (Updated: 1 Feb 2018 11:23 AM IST)
t-max-icont-min-icon

“அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொதுமக்களின் பங்களிப்பு ஆன்மா போன்றது” என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

புனேயில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

சாதகமான எண்ணங்களால் மட்டுமே பொதுமக்களின் வாழ்க்கையில் உருமாற்றத்தை கொண்டு வர முடியும். அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொதுமக்களின் பங்களிப்பு ஆன்மா போன்றது என்று நான் திடமாக நம்புகிறேன்.

ஏனென்றால், நீர் சேமிப்பு திட்டத்தின் போது (ஜல்யுக்த் ஷிவார் யோஜனா) இதனை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். இத்திட்டத்தை பொதுமக்கள் தங்கள் சொந்த திட்டமாக ஏற்றுக் கொண்டதால் தான், எங்களால் மாற்றத்தை கொண்டு வர முடிந்தது.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

Next Story