பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் 74 பேர் கைது
திருச்சியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க.வினர் 74 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலைக்கோட்டை,
தமிழக அரசு கடந்த மாதம் பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இதனை கண்டித்துஅன்று முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், ஏற்றப்பட்ட கட்டணத்தை உடனே திரும்ப பெற கோரியும் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நேற்று காலை திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை மனித நேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது தலைமையில் சத்திரம் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் கையில் கட்சி மற்றும் அமைப்பின் கொடியுடனும், பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டிக்கும் விதத்தில் கையில் பதாகைகளையும் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் அயூப்கான், த.மு.மு.க மாவட்ட செயலாளர் உதுமான்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் அப்துல் நாசர், சிராஜுதீன், சாகுல்ஹமீது, முகம்மதுராஜா, உமாயூன் கபிர், ஆலம், அப்துல்சமது, ஷரீப், நசீர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் திடீரென பஸ்களை மறித்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட 74 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் நேற்று காலை சத்திரம் பஸ் நிலையம் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story