செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச தேரோட்டம்
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு அலங்கார வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 29-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. 30-ந் தேதி அன்று குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, மதியம் 2 மணி முதல் இரவு வரை சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு பரிகார பூஜைகளுக்கு பின் கோவில் நடை திறக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நேற்று காலை ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், முருகன் சமேத வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 3.40 மணிக்கு ஏகாம்பரேஸ்வரர், விநாயகர், முருகன், வள்ளி-தெய்வானை சுவாமிகள் ஒரு தேரிலும், காமாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக முக்கிய வீதியில் பவனி வந்தது. பின்னர் தேர் மாலை 6 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் மற்றும் செட்டிகுளம், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், இரூர், மருதடி, பெரகம்பி, ஆலத்தூர் கேட் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜூ, தக்கார் பாரதிராஜா, எழுத்தர் தண்டபாணி உள்பட கோவில் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story