அரியலூரில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி


அரியலூரில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 2 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தாமரைக்குளம்,

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) இசபெல்லா மேரி வரவேற்றார். அரியலூர் வருவாய் மாவட்டத்தில் 35 பள்ளிகளில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 73 மாணவ- மாணவிகளின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட் டன. இவர்கள் ஏற்கனவே அறிவியல் கண்காட்சியில் விருது பெற்றவர்களாவர். கண்காட்சியில் இரண்டு பிரிவுகளாக, அதாவது 6, 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 9, 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலை வகுப்புகள் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.

கண்காட்சியில், போக்கு வரத்து பாதுகாப்பு அம்சங்கள், திடக்கழிவு மேலாண்மை, கடல் நீரிலிருந்து மின்சாரம் பெறுதல், மறு சுழற்சியின் அவசியங்கள், அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றலின் பயன்பாடுகள், மழை நீர் சேகரிப்பு வழி முறைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகள் என்பன உள்பட முக்கிய கருத்துக்களில் மாணவ-மாணவிகள் கண்காட்சியில் படைப்புகளை வைத்திருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டு மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர் களையும் பாராட்டினார். கண்காட்சியில் முதல் 5 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாலை பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இதில் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அனந்த நாராயணன், அரியலூர் கல்வி மாவட்ட அதிகாரி செல்வம், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அதிகாரி விஜயலட்சுமி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, பெருமாள், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சி நாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். 

Next Story