கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
கும்பகோணத்தில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அப்போது அந்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கம்பட்ட விஸ்வ நாதர் கோவில் தெற்கு வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வய46). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி(33). இவர்கள் இருவரும் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் சுவாமிமலை கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந் தனர்.
அப்போது தஞ்சை சாலையில் பேட்டை மெயின் ரோட்டில் வந்தபோது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பிரியதர்ஷினி கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மர்ம மனிதர்கள், திடீரென பிரியதர்ஷினி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்ததால் நிலைகுலைந்த பிரியதர்ஷினி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கும்ப கோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனா. அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story