தமிழகத்தில், மேலும் 11 இடங்களில் தபால்துறை சார்பில், பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும்
தமிழகத்தில், மேலும் 11 இடங்களில் தபால்துறை சார்பில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும் என்று முதன்மை தபால்துறை தலைவர் சம்பத் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் வெளிநாட்டு தபால் மற்றும் பார்சல் பதிவு மையம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு வட்ட முதன்மை தபால்துறை தலைவர் சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு தபால்துறை வட்டத்தின் கீழ் மதுரை, திருச்சி, சென்னை, கோவை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் வெளிநாட்டு தபால் மற்றும் பார்சல்கள் பெறப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது இதற்காக தனியாக பதிவு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டு வேலூர், மதுரை, சென்னை, கோவை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது 10-வது மையம் ஆகும். திருச்சி மண்டலத்தில் 2-வதாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் எளிதில் இந்த மையங்களுக்கு வந்து அனுப்பும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கேயே பார்சல்கள் ‘பேக்கிங்’ செய்யப்படும். தற்போது நமது மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சேவை மையங்கள் மூலம் எளிதில் பொருட்களை அனுப்பலாம். இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்கள் அந்தந்த நாட்டு அரசு துறையின் மூலம் உரியவர்களுக்கு வழங்கப்படும்.
இன்னும் சென்னையில் 1 இடத்திலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த பதிவு மையம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 6 மாதங்களில் ரூ.30 கோடி வணிக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 32 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது. பல்வேறு மையங்களில் மாதம் ரூ.1 லட்சம் வரை தபால், பார்சல்கள் கட்டணமாக பதிவு செய்யப்படுகிறது.
பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் தபால்துறை மூலம் பாஸ்போர்ட் சேவா மையம் தமிழகத்தில் 14 இடங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டு சேலம், வேலூர், காரைக்கால் ஆகிய 3 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 11 மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சேலம், வேலூர் மையங்களில் தினமும் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன.
தபால்துறை மூலம் இந்தியா முழுவதும் 1000 ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு வங்கிகளை சேர்ந்தவர்களும் பணம் எடுக்கலாம். தபால்துறையின் ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களும் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தபால்துறை தலைவர் வெங்கடேஸ்வர்லு, மண்டல இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் மற்றும் தபால்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story