தேர் திருவிழா


தேர் திருவிழா
x
தினத்தந்தி 2 Feb 2018 3:45 AM IST (Updated: 2 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் தேர் திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் உள்ளது ஜெகன்னாத பெருமாள் மற்றும் ஆழ்வார் கோவில். இந்த கோவிலில் ஆழ்வார் அவதார விழா தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் திருமழிசை ஆழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் வடம்பிடித்து தேரை இழுத்தார்கள். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் போன்றவை வழங்கப்பட்டது. 

Next Story