மத்திய பட்ஜெட் உள்கட்டமைப்பு பிரிவுகளை ஊக்குவிக்கும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து


மத்திய பட்ஜெட் உள்கட்டமைப்பு பிரிவுகளை ஊக்குவிக்கும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
x
தினத்தந்தி 2 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் உள்கட்டமைப்பு பிரிவுகளை ஊக்குவிக்கும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

மத்திய பட்ஜெட் உள்கட்டமைப்பு பிரிவுகளை ஊக்குவிக்கும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாய துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், பட்ஜெட்டை வரவேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.40 ஆயிரம் கோடி நிதி

உள்கட்டமைப்பு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மத்திய பட்ஜெட் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கிறது. குறிப்பாக, மும்பையில் ரெயில், விமான போக்குவரத்தை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது உள்கட்டமைப்பு பிரிவுகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக திகழும்.

மேலும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடிவு எடுத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. விவசாயிகளின் பாக்கெட்டில் நிறைய பணத்தை செலுத்துவதற்காக, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி செலவில் குறைந்தது 1½ மடங்காவது அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முத்ரா கடன் திட்டம்

முத்ரா கடன் வினியோக திட்டத்தின்கீழ், அடுத்த நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி வினியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்ரா கடன் திட்டம் இதுவரை 10 கோடிக்கும் மேலான மக்களை சென்றடைந்துள்ளது. இதில், 7 கோடி பேர் பெண்கள். அதிலும் குறிப்பாக 5 கோடி பேர் எஸ்.சி., மற்றும் பின்தங்கிய பிரிவை சார்ந்தவர்கள்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மோடி அரசின் மற்றொரு வரலாற்று சிறப்புவாய்ந்த திட்டம். இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ பயன்பாடுகளை இலவசமாக பெற முடியும். இதன் மூலம் 50 கோடி பேர் பயன்பெறுவர்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Next Story