துலேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


துலேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Feb 2018 10:15 PM GMT (Updated: 1 Feb 2018 10:04 PM GMT)

துலேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

துலேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

துலே குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர், ரமேஷ்சிங் பர்தேசி (வயது 58). இவருக்கும், இவரது மனைவிக்கும் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், விரக்தி அடைந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்சிங் பர்தேசி, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்து சுட்டார்.

இதில், துப்பாக்கி குண்டு அவரது தலையை துளைத்து வெளியேறியது. இதனால், நிலைகுலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தனது கண் முன்னே கணவர், துப்பாக்கியால் சுட்டு, உயிருக்கு போராடுவதை பார்த்து, மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். கத்திக் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் போலீசார் ஓடிவந்தனர்.

சாவு

உடனடியாக ரமேஷ்சிங் பர்தேசியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். எனினும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்சிங் பர்தேசி வருகிற மே மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த நிலையில், திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்சிங் பர்தேசிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் நாசிக்கில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story