கூட்டுக்குடிநீர் கசிவால் குண்டும் குழியுமான சாலை
உசிலம்பட்டி அருகே கூட்டுகுடிநீர் கசிவால் முக்கிய சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி-பேரையூர் சாலை உள்ளது. இந்த சாலை தொடங்கும் இடத்தில் கூட்டுக்குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. அவ்வாறு கசிந்து வரும் தண்ணீர் சாலையில் தேங்கி வருகிறது. தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் இந்த சாலையின் வழியாக சென்று வரும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாடுதான் பெரும் திண்டாட்டமாக உள்ளது. காரணம் சாலையில் உள்ள குழிகளில் கசிவு தண்ணீர் தேங்கி பள்ளங்களை மூடி உள்ளன. அப்போது இந்த சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளம் தெரியாததால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் பல முறை விபத்துக்களை ஏற்படுத்தும் இந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலதடவை கோரிக்கை வைத்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அதிக அளவு போக்குவரத்து உள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையிலும், தேவர் சிலை அருகில் உள்ள பள்ளங்களையும் சரி செய்து மேலும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story