சாயல்குடி அருகே பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 பேர் படுகாயம்


சாயல்குடி அருகே பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:30 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாயல்குடி,

சாயல்குடி அருகே டி.கிருஷ்ணபுரம் கிராமத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பின் இந்த கட்டிடம் கடந்த 2013-14-ம் நிதியாண்டில் மராமத்து செய்யப்பட்டது. தற்போது இங்கு 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பள்ளியின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர் அச்சம் அடைந்து வெளியே ஓடினர். மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 5-ம் வகுப்பு மாணவி சகானா, மாணவன் விஷால் மற்றும் 2-ம் வகுப்பு மாணவி வாணிஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.

உடனடியாக அவர்கள் 3 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் வாலிநோக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

Next Story