தா.பழூர் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
தா.பழூர் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் மகன் வீரத்தமிழன் (வயது 21). டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்த இவர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் வீரத்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர் சிறுமியுடன் காதலை தொடர்ந்துள்ளார். ஆனால் அவர்களது பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று வீரத்தமிழன் வீட்டுக்கு சிறுமி வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இருவரும் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வீரத்தமிழனை சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story