அண்ணா நினைவு நாள் கோவில்களில் பொது விருந்து


அண்ணா நினைவு நாள் கோவில்களில் பொது விருந்து
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நினைவு நாளையொட்டி கோவில்களில் பொது விருந்து நடந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் அண்ணா நினைவு நாளையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் 500 பேருக்கு பொது விருந்து நடைபெற்றது. இதற்கு கோவில் செயல் அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவிருந்தை தொடங்கி வைத்து அனைவருடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

நிகழச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பொது விருந்து மற்றும் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 750 பேருக்கு பொது விருந்தும், 2,300 பேருக்கு இலவச சேலையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கோவிலின் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் வேல்அரசு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் வெங்கடேசன் தலைமையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த பொது விருந்தில் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி கலந்து கொண்டு உணவு சாப்பிட்டார். இதில் இந்து சம்ய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் முருகபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்் கோ.அரி எம்.பி., திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன். திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story