ரவுடி சேட்டு கொலை வழக்கில் 3 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்
ஓசூர் ரவுடி சேட்டு கொலை வழக்கில் 3 பேர் நேற்று கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ரவுடி சேட்டு (வயது 36) கடந்த மாதம் 13-ந் தேதி காரில் கடத்தப்பட்டு, 14-ந் தேதி சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி என்னும் இடத்தில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். 2 கொலை வழக்கு உள்பட பல வழக்கில் தொடர்புடைய ரவுடி சேட்டு ஓசூர் ராம் நகரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த கொலை தொடர்பாக அட்கோ போலீசார் நடத்திய விசாரணையில், ஓசூர் பிரபல ரவுடி கொற கோபி கோஷ்டியினர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடிய ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கொற கோபி கடந்த 25-ந் தேதி தர்மபுரி கோர்ட்டில் சரண் அடைந்தான். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவனை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் சேலம் சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக கொற கோபியின் வலது கரமாக செயல்பட்டு வந்த ராஜா என்கிற தொப்பி ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ரவுடி சேட்டு கொலை தொடர்பாக ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (33), நரேஷ் (34), பிரவீன் (31) ஆகிய 3 பேர் நேற்று கிருஷ்ணகிரி 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதையொட்டி சரணடைந்த 3 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரவுடி சேட்டு கொலையில் இதுவரை 4 பேர் சரண் அடைந்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவாஸ், சுகேல் ஆகிய 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story