ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க– தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு,
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் நினைவு தினம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் மண்டலத்தலைவர் மனோகரன், பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் வீரக்குமார், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அருண்குமார், வார்டு செயலாளர் சந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, துணைச்செயலாளர் ஆ.செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், வி.சி.நடராஜன், குறிஞ்சி சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மீனவர் அணி செயலாளர் ஆஜம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டார்பாபு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் பயர்பர்மான், பகுதி செயலாளர்கள் திருநாவுக்கரசு, மோகன்குமார், பொதுக்குழு உறுப்பினர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.