மத்திய அரசின் பட்ஜெட்டை பா.ஜ.க. தொழிற்சங்கம் கூட அங்கீகரிக்கவில்லை
திங்கள்சந்தையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசின் பட்ஜெட்டை பா.ஜ.க. தொழிற்சங்கம் கூட அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
நாகர்கோவில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்ட மாநாடு குளச்சலில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று திங்கள்சந்தையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நிகழும் முக்கியமான மாற்றங்களுக்கு தமிழகம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. முதலாளித்துவம் மற்றும் சாதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் போராட்டம் நடந்தது. அந்த வகையில் தமிழகம், இந்தியாவுக்கு ஒரு முன் உதாரணம். இந்த போராட்டங்களில் பெரியாரின் பங்கு முக்கியமானது.
தற்போது பா.ஜ.க. அரசை ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பின்னால் இருந்து இயக்குகின்றன. மத்திய அரசுக்கு மக்கள் நலன் குறித்து சரியான பார்வை இல்லை. மேலும் பா.ஜனதா அரசு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை எழுதி வந்த கவுரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஒரே மாதிரியாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க மத்திய அரசு விரும்பவில்லை. பிரிவினை வாதம் மற்றும் மோதல்களை ஊக்கப்படுத்தி வருகிறது. நாட்டில் தலித் மற்றும் சிறுபான்மை இன மக்கள் மீதான தாக்குதல் சங்பரிவார் அமைப்புகள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.
மத்தியில் பல வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பின்பற்றி வந்த மக்கள் விரோத கொள்கைகளையே தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசும் பின்பற்றி வருகிறது. மக்கள் விரோதத்தை வளர்த்ததால்தான் காங்கிரஸ் அரசை தூக்கி விட்டு பா.ஜ.க.வுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் ஆட்சியில் கட்சி மட்டும் தான் மாறி உள்ளது. எனவே மக்கள் மத்திய பா.ஜனதா அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பா.ஜ.க. தொழிற்சங்கம் கூட அங்கீகரிக்கவில்லை. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு தெரியாமலேயே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினர். இதனால் சிறு, குறு தொழில்கள் மட்டுமின்றி சாதாரண பெட்டிக்கடை நடத்தி வருபவர் முதற்கொண்டு அனைவரும் பாதிக்கப்படும் நிலையை பா.ஜனதா அரசு உருவாக்கிவிட்டது.
ஒகி புயலின் போது கடலோர மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். அவர்களின் துயரத்தை மக்களோடு இணைந்து செயல்படும் அரசு மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தற்போது கேரள பட்ஜெட்டில் ஒகி புயல் மறுசீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் முருகேசன், வரவேற்புக்குழு செயலாளர் புஷ்பதாஸ், மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லீமாரோஸ், பெல்லார்மின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன்விளை, கல்லுக்கூட்டத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் போது சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில், கேரள கடற்பகுதியில் கப்பல் மோதி இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கப்பல் மோதி மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், அந்த சம்பவத்துக்கு காரணமான கப்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story