மகிழ்ச்சி தரும் ஆய்வு


மகிழ்ச்சி தரும் ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:45 PM IST (Updated: 4 Feb 2018 2:43 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட்போன் இளைய தலைமுறையினரின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்காக மாறி விட்டது. அதனை அதிகம் பயன்படுத்துவது நிம்மதியையும் குலைத்து விடும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சான் டைக்கோ, ஜார்ஜியா ஆகிய பல்கலைக்கழகங்கள் ஏராளமானவர்களிடம் சர்வே மேற்கொண்டது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவைகளை எவ்வளவு நேரம் பயன் படுத்துகிறார்கள், அதில் சமூக வலைத்தளங்களுக்காக செலவிடும் நேரம் எவ்வளவு என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிப்பவர்கள், நேருக்கு நேர் உரையாடுபவர்கள், விளையாட்டு பயிற்சி மேற்கொள்பவர்களை காட்டிலும் கம்ப்யூட்டர், செல்போனில் கேம்ஸ் விளையாடுபவர்கள், குறுந்தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்களிடம் மகிழ்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் சமூகவலைத்தளங்களை குறைந்த நேரம் பயன்படுத்துபவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் டிவெங்கி கூறுகையில், ‘‘கடந்த ஐந்தாண்டுகளில் செல்போனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களை நாடுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். சமூக வலைத் தளங்களில் செலவிடும் நேரம் இரண்டு மணி நேரத்துக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மீதமிருக்கும் ஓய்வு நேரங்களை நண்பர்கள், உறவினர்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து உரையாடுவதற்காக செலவிடுவது மகிழ்ச்சியை கொடுக்கும்’’ என் கிறார்.

Next Story