தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
தூத்துக்குடி,
தென்காசியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா? என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரை சுத்திகரித்து 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும். இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? என்னிடம் கேட்டால், இஸ்ரேலில் இருந்து எந்திரம் கொண்டு வந்து கடற்கரையில் வைத்தால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. 4 மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க முடியும்.
தமிழகம் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கருதினால், 40 எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். அவர்கள் டெல்லியில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
டி.டி.வி.தினகரன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தைரியமாக நின்று வெற்றி பெற்று உள்ளார். அவர் வளர்ச்சி பெற்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு வாழ்த்துக்கள். நிதி மந்திரி அருண்ஜெட்லி குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குறை கூறுகிறார். அவர் தன் மீதான வழக்கில் விரைவில் ஜெயிலுக்கு போக உள்ளார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் 10 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகி வருகிறது. நான் பதவிக்காக ஆசைப்படமாட்டேன்.
தமிழகத்தில் பா.ஜனதாவில் தொண்டர்கள் அதிகம் உள்ளனர். தனியாக நல்ல வேட்பாளர்களை நிற்க வைத்தால், பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளரை தேர்வு செய்யாமல், தொண்டர்கள் ஆதரவுடன் வேட்பாளர்களை நிறுத்தினால் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story