வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர்,
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி பூஜைகள் தொடங்கியது. அன்று காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
2-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை நிர்மாணம், தீபாராதனையும், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாகபூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. 3-வது நாளான நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, 2-ம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம் ஆகியவையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடந்தது. தினமும் திரளான பக்தர்கள் அம்பாளை தரிசித்து யாக சாலையையும் வலம் வந்து தரிசித்தனர்.
நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலும் கோவிலுக்கு வெளியிலும் திரண்டிருந்தனர். 9 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் சிவாச்சாரியார்கள் மூலம் கோவில் சன்னதியை சுற்றி எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து 9.45 மணிக்கு கலசங்கள்மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 6.30 மணிக்கு வாணவேடிக்கையுடன் செல்லியம்மன் வீதிஉலா நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் விஜயக்குமார், மண்டல தணிக்கைக்குழு அலுவலர் சரோஜா, செயல் அலுவலர்கள் மாதவன், ராதாமணி, பத்மினி சி.குணசேகரன், பத்மாவதி பிரஸ் சி.குமரவேல், திருப்பணி கமிட்டி தலைவர் எல்.கே.எம்.பி.பாபு, துணைத்தலைவர்கள் எம்.சுப்பிரமணி, கே.ரங்கநாதன், பி.மனோகரன், செயலாளர்கள் எஸ்.ராஜேந்திரன், மு.கோபி, பி.நாராயணன், பொருளாளர்கள் ஜி.மேகநாதன், என்.முரளி, துணைசெயலாளர்கள் எஸ்.குமார், பி.பாலசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story