கிருஷ்ணகிரிக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


கிருஷ்ணகிரிக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 5 Feb 2018 4:15 AM IST (Updated: 5 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரிக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.மனோகரன் இல்ல திருமண விழா தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டார். இரவு 8.45 மணியளவில் அவர் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

அவருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தர்மபுரி மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகி மணி மற்றும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில் நேற்று இரவு தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று காலை தர்மபுரிக்கு சென்று முன்னாள் எம்.எல்.ஏ. கே.மனோகரன் இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கிறார். பின்னர் காரில் கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்கிறார் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story