பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் 16-ந் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் வருகிற 16-ந் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கூறினார்.
மலைக்கோட்டை,
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற, வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை பொது செயலாளர்கள் இளங்கோ, ஜெய்சங்கர், டி.இ.பி.இ.ஓ தலைவர் ஜீவா, துணை பொது செயலாளர்கள் குருவேல், இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வேலை நிறுத்தம் குறித்து பேசினர்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
மின்வாரிய ஊழியர்களுக்கு 26 மாதங்களுக்கு முன்பாக ஊதிய உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். கடந்த 21-ந் தேதி நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வருகிற 12-ந் தேதிக்குள் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இந்த வாக்குறுதியை புறந்தள்ளும் வகையில் மின்துறை அமைச்சர் 26 மாதங்களாக வழங்காத இடைக்கால நிவாரணத்தை தற்போது வழங்குவதாக அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி வருகிற 12-ந் தேதி ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி தொழிலாளர்கள் மத்்தியில் எழுந்துள்ளது. எனவே வருகிற 12-ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படவில்லை என்றால் 80 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் வருகிற 16-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுமா அல்லது அடையாள வேலை நிறுத்தம், ஒருநாள் வேலை நிறுத்தம், அல்லது காலவரையற்ற வேலை நிறுத்தமாக மாறுமா என்பது தெரியும். இந்த வேலை நிறுத்தம் அரசின் கையில் தான் உள்ளது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Related Tags :
Next Story