மேட்டூர் அணை நீர்மட்டம் 43.60 அடியாக குறைந்தது: நந்திசிலை முழுவதும் வெளியே தெரிகிறது
மேட்டூர் அணை நீர்மட்டம் 43.60 அடியாக குறைந்து விட்டதால் தண்ணீரில் மூழ்கி இருந்த நந்திசிலை முழுவதும் வெளியே தெரிகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி பண்ணவாடி பரிசல்துறை வெறிச்சோடியது.
கொளத்தூர்,
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் 120 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல் உள்பட 12 டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும். மேலும் குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் காவேரிபுரம், சாம்பள்ளி, புதுவேலமங்கலம் உள்பட 13 கிராமங்கள் இருந்தன. அணை கட்டப்பட்டதும் இந்த கிராமங்களை விட்டு வெளியேறிய பொதுமக்கள் தாங்கள் வழிபாடு செய்து வந்த வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு விட்டு வெளியேறினர். அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணை நீர்தேக்கப்பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புராதன நினைவு சின்னங்களான கிறிஸ்தவ கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோவில் முகப்பு, நந்தி சிலை, ராஜாகோட்டை ஆகியவை வெளியே தெரியும்.
அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருக்கும்போது கிறிஸ்தவ கோபுரமும், நீர்மட்டம் 65 அடியாக குறையும்போது நந்தி சிலையும் வெளியே தெரியும். தற்போது அணை நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. நேற்று காலை 8 மணியளவில் 43.60 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடி நீர்தேக்கப்பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ கோபுரம், நந்தி சிலை, நந்தி சிலையின் பின்புறமுள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலய முகப்பு ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது. பண்ணவாடி நீர்தேக்கப்பகுதியில் நந்தி சிலை அமைந்துள்ள பகுதி ஒரு தீவு போல காட்சியளிக்கிறது. நந்தி சிலை அமைந்துள்ள நீர்தேக்கப்பகுதி உழவு செய்யப்பட்டு விவசாய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகமாக இருக்கும்போது நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் காவிரிஆறு கடல்போல காட்சியளிக்கும். இது கண்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். மேலும் இங்கு சுவை மிகுந்த மீன்கள் கிடைக்கும் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் பண்ணவாடிக்கு வந்து செல்வது வழக்கம்.
தற்போது சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. காவிரி ஆறும் சுருங்கி ஓடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து போனது. பண்ணவாடி பரிசல் துறையில் இருந்த மீன் கடைகளும், தற்காலிக உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Tags :
Next Story