நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ், மண்டல தலைவர் மதிமணியன், மண்டல செயலாளர் கருபாலன், மாவட்ட துணைத்தலைவர் கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., பகுத்தறிவாளர் கழக மாநில செயல் தலைவர் தமிழ்ச்செல்வி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி பாண்டியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சாதிக்பாஷா, மனித நேயமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளின் கல்வி உரிமையை பாதிக்கும் நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக்கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஏழை எளிய மாணவ-மாணவிகளின் உயர்கல்வி வாய்ப்பை கேள்விக்குறியாக்கும் நீட்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த வலியுறுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்ராயன், தமிழ்ச்செல்வன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story