ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ‘டிஸ்சார்ஜ்’


ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 6 Feb 2018 3:05 AM IST (Updated: 6 Feb 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.

மும்பை,

மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின் போது ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது தெரியவந்தது. இருப்பினும் அந்த குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது கணவர் முடிவெடுத்தனர்.

பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீத்தலுக்கு பிரசவம் ஆனது. வயிறு மற்றும் இடுப்பு பகுதி ஒட்டிய நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அந்த இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர். குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டுக்கு பின் அண்மையில் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20 டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர். 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதில், குழந்தைகள் இருவரும் வேகமாக குணமடைந்தனர். இந்தநிலையில் நேற்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story