ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 33 பேர் காயம்
இலுப்பூர் அருகே ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.
நார்த்தாமலை,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த ஆலத்தூரில் உள்ள நீலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இடம், காளைகள் வெளியேறும் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.
அதை நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினார்கள். இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை.
சில காளைகள் தன்னை பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதன்பின்னர் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், தங்க நாணயம், வெள்ளி நாணயம், ஹெல்மெட், குத்துவிளக்கு, செல்போன் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள் சேகர், ஆனந்த், தமிழ்செல்வன், பெரியய்யா மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார்நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 9 பேர் மேல்சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை ஆலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் சரக்குஆட்டோ, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்து கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story