திருவாரூரில் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்,
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், நாகை வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர்கள் ஞானசேகரன், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நகராட்சி, மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை கடை வாடகையை உயர்வு மறுபரிசீலனை செய்து முறைப்படுத்திட வேண்டும். கட்டிடங் களுக்கான சொத்து வரி உயர்வை நடப்பு ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அரசு பஸ்களில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில துணைத் தலைவர்கள் சிவசுப்பிர மணியன், சுப்பு, மாநில இணை செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர்கள் பக்கிரிசாமி, சத்தியநாராயணன், நவநீதம், குகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ராஜேந்திரன், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் அருள் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story