‘தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்றுவேன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
‘தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்றுவேன்’ என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
காவேரிப்பட்டணம்,
தமிழகம் முழுவதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் சென்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவே காரில் கிருஷ்ணகிரி வந்தார். பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
நேற்று காலை 10 மணி அளவில் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பாணிப்பட்டியில் சென்னை சங்கர நேத்ராலயாவின் நடமாடும் கண் அறுவை சிகிச்சை பிரிவின் 50-வது முகாம் நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் சார்பில் திருமண மண்டபங்களில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அப்போது தொற்று நோய் பரவி வந்தது. இதை தடுக்கும் வகையில் 2015-ம் ஆண்டு நடமாடும் கண் அறுவை சிகிச்சை மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இன்று கிராமங்கள்தோறும் நடமாடும் கண் அறுவை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தமிழ் மொழி இனிமையான மொழியாகும். தமிழ் மொழியை கற்பதற்காக நான் ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளேன். இன்னும் 5 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில் கவர்னராக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில், “வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்பை நீர துடைத்து“ என்ற திருக்குறளை படித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், அதற்கான விளக்கத்தை அளித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடமாடும் கண் அறுவை சிகிச்சை பிரிவின் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மாபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பசுமை கழிவறைகளை கவர்னர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து திம்மாபுரம் கிராமத்தில் ‘தூய்மையே சேவை’ என்ற சுகாதார விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, தொப்பி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த குப்பைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுத்தம் செய்தார்.
இதையடுத்து அங்கு ஊர்புற நூலகத்தில் நடந்த பொது மருத்துவ முகாமை கவர்னர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். தொடர்ந்து நலக்கல்வி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் உறுதிமொழியை ஆங்கிலத்தில் படித்தார். அப்போது கிராம மக்கள் சிலர் அதை கூற முடியாமல் சிரமப்பட்டார்கள். உடனே பள்ளி மாணவிகள் 2 பேரை கவர்னர் அழைத்து அதை தமிழில் படிக்க கூறினார். இதையடுத்து மாணவிகள் தமிழில் உறுதிமொழியை படிக்க பொதுமக்கள் திரும்ப படித்தனர்.
இதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, தமிழக கவர்னரின் கூடுதல் முதன்மை அரசு செயலர் ராஜகோபால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கார் மூலம் புறப்பட்டு கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையை வந்தடைந்தார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மாலை 5 மணி அளவில் கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிருஷ்ணகிரி வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story